மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரட்ணஜீவன் ஹுல் மீது அரசியலமைப்பு சபை விசாரணை?

- Advertisement -

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் குறித்து அரசியலமைப்பு சபை விசாரணைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்றமை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை மற்றும் பக்கச் சார்பாக செயற்படுகின்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவர் மீது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடமும் பல்வேறு தரப்பினர் தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

எனினும், அரசியலமைப்புப் பேரவையின் ஊடாகவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதன் அடிப்படையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் குறித்து அரசியலமைப்பு சபை விசாரணைகளை நடத்தவுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் அவரது செயற்பாடுகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹுல் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் பக்கச்சார்பான செயற்பாடுகள் குறித்து, அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரினால் வழங்கப்படும் அறிக்கைகளின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறித்த சிங்கள இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz