மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரட்ணஜீவன் ஹூலின் நடவடிக்கையால் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கையிழப்பு!

- Advertisement -

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலின் நடவடிக்கை காரணமாக நாட்டின் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

“இந்த நாட்டில் மிகபாரிய கட்சியாக  தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஜுலுக்கு பொதுஜன பெரமுன கட்சி தென்படுகின்றது.

ஐக்கியதேசியக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இவை அனைத்தையும் காட்டிலும், உருவாக்கப்பட்டு 4 வருடங்கள் கூட முடிவடையாத பொதுஜன பெரமுன கட்சி அவருக்கு சவாலாக அமைந்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சுயாதீன தீர்மானங்களை ஆணைக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது யார் என்னது தொடர்பிலும் சந்தேகம் உள்ளது.

அவர்கள் கட்சி ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுகின்றனரா என சந்தேகம் காணப்ப்டுகின்றது. முழு நாட்டுக்கும் தற்போது இது தொடர்பில் பாரிய சந்தேகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் உள்ள நம்பிக்கை தற்போது நாட்டில் அற்றுப்போயுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

Developed by: SEOGlitz