மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுவராஜ்சிங் மீது பொலிஸில் முறைப்பாடு!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான யுவராஜ்சிங் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளத்தில் யுவராஜ்சிங் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இதன்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிட்ட ஒரு ‘டிக்டாக்’ பதிவு குறித்து தகாத வார்த்தைப் பிரயோகம் ஒன்றினை யுவராஜ்சிங் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் சாதியை இழிவுபடுத்தும் வகையில் யுவராஜ்சிங் கருத்துத் தெரிவித்திருந்ததாக ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி போலீஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

மேலும் யுவராஜ்சிங் மீது வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 507 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யெமனில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

யேமனின் தலநகர் Sanaa பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், ...

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் கலந்துரையாடல்...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியினால் இன்று முன்னெடுப்பு!

சொந்தக் காணிகள் அற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டடது. அரசாங்கத்தின் சுபீட்சமான...

உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையின் பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் 22 பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

Developed by: SEOGlitz