மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று : மக்களுக்கு எச்சரிக்கை!

- Advertisement -

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ் வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோய்யும் கொரோனா போன்று மக்கள் வழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு கொடிய நோயாகும்.

கடந்த 3 நூற்றாண்டு காலமாக உலகெங்கும் காச நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு 1.2 மில்லியன் மக்கள் காச நோயால் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 1.1 மில்லின் சிறுவர்கள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக காச நோயாளர்களை இனங்காணப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்படும் வறுமையும் காச நோய் பெருக்கத்தை ஏற்படுத்தும்.

இருவாரமாக தொடர் இருமல், மாலை வேளைகளில் காய்ச்சல், நெஞ்சு நோ, உடல் மெலிவு, உணவில் விருப்பமின்மை, சளியுடன் குருதி வெளியேறுதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சளிப்பரிசோதனை செய்ய வேண்டும்.

காச நோய்க்கு உள்ளான ஒருவருக்கு 6 மாத தொடர் சிகிச்சை மூலமாக அவரை முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம் எனவே இதை கண்டு அஞ்சத் தேவையில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz