- Advertisement -
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கட்டிட தொகுதி முழுவதிலும் தொற்றுநீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக மாவட்ட செயலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
இதனையடுத்தே மக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களினது சுகாதாரப் பாதுகாப்பிற்காக மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடுகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -