மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவுகள் – கடந்து செல்லும் 39 ஆண்டுகள்!

- Advertisement -

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் எம்மைக் கடந்து செல்கின்றன.

97 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களுடன் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ் நூலகத்தினை இனவாதிகள் எரித்துச் சாம்பலாக்கிய தினம் இன்றாகும்.

- Advertisement -

தமிழ் மண்ணின் அடையாளமாகவும், வரலாற்றுச்சின்னமாக, பழம்பெரும் சொத்துக்களான மீளக்கிடைக்காத பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த யாழ் நூலகம் இனவாதத் தீயில் கருக்கப்பட்ட கறுப்பு நினைவுநாள் இன்றாகும்.

1933 ஆம் ஆண்டிலிருந்து யாழ் நூலகத்ததிற்கான அடித்தளமிடப்பட்டு தமிழனத்தின் அடையாளமாய் 1959 ஆம் ஆண்டு யாழ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

படிப்படியாகப் பல பரிமாணங்களுடன் யாழ்ப்பாணத்தில் மிடுக்குடன் எழுந்து நின்ற நூலகம் 1981 ஆம் ஆண்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந்திகதி இரவு நூலகம் எரியூட்டப்பட்டபோது, 97 ஆயிரத்துக்கும் அதிகமான பெறுமதியான நூல்களும், ஆவணங்களும் அழிவடைந்திருந்தன.

இருப்பினைக் கருவறுப்பதற்குத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இதுவுமென்றாகப் பதிந்து போனது தமிழனத்தினது வரலாற்றில்….!

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz