யாழ்ப்பானத்தில் அமைந்துள்ள நாகவிகாரையின் புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ள பகுதியில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றறுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பட்டார்.
அடையாளம் தெரியாத சிலரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கல்வீச்சு தாக்குதலில், புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி சுவர் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், யாழ்ப்பாணம் பொலியாஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.