மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது!

- Advertisement -
கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் இன்றைய தினம் மீள திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார் கள்.
நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது காலை 6- 12 மணி வரை ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz