மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் பசுவைக் கொலை செய்த நபர்களுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு!

- Advertisement -

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தால் மோதி பசு மாடு ஒன்றை கொலை செய்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீதியைக் கடந்த பசு மாடு ஒன்றை அந்த வழியால் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை மீறி மோதியதில் பசு மாடு உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்தது.

- Advertisement -

கடந்த மே 18ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தில் அந்த இடத்திலேயே உழவு இயந்திரத்தைக் கைவிட்டு அதில் பயணித்த மூவரும் தப்பித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதியிலிருந்த சிசிரிவி கமரா பதிவின் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போலின் உத்தரவில் இரண்டாவது தடவையாக வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி திங்கட்கிழமை விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எனக் குறிப்பிட்ட நபர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.பீற்றர் போல், இரண்டாவது சந்தேக நபரையும் வரும் ஜூன் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சாரதியான இரண்டாவது சந்தேக நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz