யாழ்ப்பாணம், நாவற்குழிப் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி ரயில் நிலையத்தருகில் நடந்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், புகையிரத ஓடு பாதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த இளைஞரே மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நாவற்குழி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.