யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களை சாவகச்சேரி பொலிசார் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருந்தபோதே குறித்த இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இளைஞர்களை கடுமையாக எச்சரித்து, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்களை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது அப்பகுதியில் சிறிய பதற்றநிலை தோன்றியதாகவும்,எனினும் விசாரணையின் பின்னர் குறித்த இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பொலிசார் உறுதி அளித்ததை அடுத்து பதட்டம் தணிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.