இந்தியாவின் கேரள மாநிலத்தில் சைலன்ட் வேலி வனப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி யானை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமாகவே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கேரளாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விலங்குகள் மீது அன்பு செலுத்துவோம் எனவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோழைத்தனமான இதுபோன்ற செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறித்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.