மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொனறாகலையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!

- Advertisement -

மொனறாகலை பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்  நபரொருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இதேவேளை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மொனறாகலை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர்  சிகிச்சைகளுக்காக மொனறாகலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மொனறாலை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட  சந்தேக நபர்  அடையாளம் காணப்பட்டுள்ள  நிலையில் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மொனறாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

Developed by: SEOGlitz