மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானியின் பிணை மனு நிராகரிப்பு!

- Advertisement -

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி செயலணியின் பிரதானி ஐ எச் கே மஹனாமவின் பிணை மனுக் கோரிக்கையினை கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது,

கந்தளாய் சீனித் தொழிற்சாலை தொடர்பான விவகாரத்தில் இந்திய பிரஜைகள் இருவரிடம் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி ஐ எச் கே மஹனாம சிறைத் தண்டனை பெற்றிருந்தார்

- Advertisement -

இந்த நிலையிலேயே இவரது பிணை கோரிய மனு மீதான விசாரணை சம்பத் அபேகோன்,சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது,

அத்துடன் குறித்த பிரதான சந்தேகநபருக்கு பிணை வழங்குமளவுக்கு எவ்வித விசேட காரணிகள் எதுவுமில்லை என நீதிபதிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz