கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும்போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது விடுதலைப்புலிகளின் சீருடையுடனான மனித எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றன.
இதன்போது 02 மகசின்கள், 34 தோட்டாக்கள் 34,
இலக்கத்தகடு, விடுதலைப் புலிகளின் சீருடைகள், மற்றும்
முனித எலும்பு எச்சங்கள் சிலவும் மீட்கப்பட்டன.
மேலும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெறும் என முகமாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.