மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விசேட பேருந்து சேவை!

- Advertisement -

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு  நோயாளர்களை  அழைத்து வருவதற்கென  ‘அபெக்‌ஷ எக்ஸ்பிரஸ்’ எனும் பேருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் கிளினிக் நோயாளர்களை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வகையிலேயே இந்த பேருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு  இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டமையினால் கிளினிக் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து தடைப்பட்டதாகவும் இதனால் கிளினிக் நோயாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கென அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கான இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட மாட்டது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

அமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

Developed by: SEOGlitz