மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுசா சந்திரசேகரன் நீக்கம்!

- Advertisement -

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுசா சந்திரசேகரன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று மலையக மக்கள் முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இதன்போது கருத்து தெரிவித்த போதே மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோறன்ஸ் குறித்த முடிவினை அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின் அவரை கௌரவப்படுத்தும் வகையில் அனுசா சந்திரசேகரன் அவர்களுக்கு பிரதிசெயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம்.

ஆனால் அவருடைய சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக அவரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.

அவருக்குப் பதிலாக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான பேராசிரியர் விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி என்பது மலையகத்தில் மக்கள் மத்தியில் இடம்பிடித்த கட்சியாகும்.

இதனை உருவாக்கிய அமரர் சந்திரசேகரனுக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே சிரேஷ்ட உறுப்பினர்களிடமிருந்து இப்பதவியினை பெற்று இவருக்கு கையளிக்கப்பட்டது.

ஆனால் இவர் அந்த பதவியினை முறையாக செய்யாமல் சுயநலமாக செயற்பட்டதன் காரணமாக அவரை நாங்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இராதாகிருஸ்னண் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து...

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 363 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளமை...

Developed by: SEOGlitz