நானுஓயா மற்றும் லிந்துலை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று மின் விநியோகத்தடை ஏற்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மின் விநியோகத்தடை ஏற்படவுள்ளது.
அத்தியாவசிய பாராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த மின் விநியோகத்தடை இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் நுவரெலியா பிராந்தியக் கிளை அறிவித்துள்ளது.
இதன்படி லிந்துலை நகரம், லிந்துலை வைத்தியசாலை, லெமிலியர், சமர்செட், மட்டுக்கலை, சென்கூம்ஸ், கல்கந்தவத்தை, வங்கிஓயா, ரதெல்ல மற்றும் உடரதல்ல ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் 3 மணித்தியால மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்துருகிரிய, மிலேனியம் சிட்டி மற்றும் ஒருவல உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய இன்று காலை 8 மணிமுதல் எதிர்வரும் நாளை காலை 8 மணிவரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான நீர்க்குழாயில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.