மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு!

- Advertisement -

மன்னார் பேசாலை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

- Advertisement -

பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பொருட்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மன்னார் நீதி மன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலைப் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்படடிருந்த குறித்த பொருட்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டவை என பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz