நாட்டில் உள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்தும் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 50 பேரை மாத்திரம் உள்ளடக்கிய வகையில் மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கமைய மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்று கூடல்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.