இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதன் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் வருடத்திற்கு 65 ஆயிரம் கிலோ லீட்டருக்கும் அதிகளவு மசகு எண்ணெய் நுகர்வுக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், நாட்டுக்கு மசகு எண்ணையினை இறக்குமதி செய்வதனால் அதிக அளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியில் செல்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னதாக நாட்டில் மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்த போதும் பல்வேறு காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மசகு எண்ணெய் உற்பத்தி தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்கமைய, அதி நவீன உபகரணங்களை பயன்படுத்தி ஆண்டுக்கு 33 மில்லியன் கிலோ எடைகொண்ட மசகு எண்ணெயை உற்பத்தி செய்ய முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் CEYPETCO எனும் பெயரில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.