நாளை முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உரிய திட்டங்களை மேற்கொள்ளாது போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்துரையாடாது, வேறு நபர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உரிய திட்டங்களை வகுக்காத காரணத்தினால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பேருந்துகளில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது தனியார் பேருந்துகள் 50 வீதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.