மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து அமைச்சர் விடுக்கும் விசேட அறிவிப்பு!

- Advertisement -

சாதாரன பேருந்துகளில் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அறிவிடுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாதாரன கட்டண அறவீட்டுடன் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் பயணக் கட்டணத்தை அறவிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மற்றும் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் ஆகியோரினால் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடுமுழுவதும், சாதாரன கட்டண அறவீட்டுடன் இயங்கும் பேருந்துகள், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதனால் சிரமத்திற்கு உள்ளாவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

வார இறுதி நாட்களில் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் திட்டம்...

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz