மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுத் தேர்தல் தொடர்பாக நாளை விசேட கலந்துரையாடல் : மகிந்த தேசப்பிரிய!

- Advertisement -

பொதுத் தேர்தல் தொடர்பாக நாளை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் தேர்தல் ஆணையகத்தில் நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேற்படி கலந்துரையாடலில் பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் அதிகாரியான கங்கனி லியானகே தெரிவித்துள்ளார்.

தட்டச்சு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அச்சிடுதல் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் திணைக்களம் முன்னர் 17 மில்லியன் வாக்குச் சீட்டுக்களை அச்சிடுமாறு அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்ததையடுத்து தாம் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகளை ஆரம்பித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz