மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை இன்று!

- Advertisement -

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இன்று காலை மாதிரித் தேர்தல் நடைபெறுகின்றது.

தனிமைப்படுத்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான சிறப்பு ஒத்திகைத் தேர்தலாக இது நடைபெறுகின்றது.

- Advertisement -

இதற்கமைய, அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விகாரை வாக்களிக்கும் நிலையமாக தெரிவிசெய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைப்பது, வாக்காளர்களுக்கான வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இந்த மாதிரித் தேர்தலில் 200 வாக்காளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேர்தல் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை எடுக்குமானால் நாளை நள்ளிரவு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி, வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விருப்பு இலக்கங்களை அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மியன்மாரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனநாயகத்தைப்...

இலங்கைக்கு எதிரான T20 தொடரை வசப்படுத்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளின் Antigua வில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

கொரோனா தொற்றினால் 7 வாரங்களான குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 7 வாரங்களான பெண் குழந்தையொன்று கொரோனா தொற்றுகாரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர...

இன்றைய ராசி பலன் -08/03-2021

மேஷம் -மறதி ரிஷபம் - ஓய்வு மிதுனம் - ஆசை கடகம் - ஜெயம் சிம்மம் - கோபம் கன்னி - கீர்த்தி துலாம் - தடங்கல் விருச்சிகம் - பகை தனுசு - வரவு மகரம் - அன்பு கும்பம் - இலாபம் மீனம் - திறமை

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் -ஜனாதிபதி

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார். மேலும், சுபீட்சத்தின் நோக்கு...

Developed by: SEOGlitz