- Advertisement -
பெல்ஜியத்தில் மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெல்ஜியத்தில் கடந்த 12 வாரங்களுக்குப் பின்னர் முதன் முறையாக பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இவ்வாறு திறக்கப்பட்டுள்ள வணிக நிலையங்களில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பணியாளர்கள் பாதுகாப்பு முகக் கவசங்களை அணிவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.