பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனவளப்பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் அனைத்து பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் பொதுமக்கள் பாவனைக்காகத் திறக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விலங்கியல் தோட்டங்கள், தாவரவியல் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஜூன் 15 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.