மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளரிடம் கையளிப்பு!

- Advertisement -

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று யாழ் மாவட்ட அரச அதிபரினால் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜேஃ159 சங்கரத்தை துணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீட்டினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

- Advertisement -

மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபா நிதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்திற்கு மேற்படி வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

513 பிரிகேட், 51 படைப்பிரிவில், பிரிகேடியர், லலித் ரத்நாயக்கவின் பணிப்பின் கீழ் இராணுவத்தினரின் பங்களிப்பில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், இராணுவ உயர் அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர் உட்பட வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட கிராம சேவையாளர், பிரதேச செயலக அதிகாரிகள், உட்பட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளரிடம் கையளிப்பு! 1 யாழில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளரிடம் கையளிப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது!

தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 68 பொலிஸ் பிரிவுகளில்...

இரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்!

இரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

Developed by: SEOGlitz