பிரேசிலில் கொரோனாத் தொற்றுக் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 337 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், 28 ஆயிரத்து 882 பேர் புதிதாக கொரோனாத் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பிரேசிலில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 12 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரை 33 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் பிரேசில் நாட்டில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் 66 இலட்சத்து 88 ஆயிரத்து 922 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேநேரம், குறித்த வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் 3 இலட்சத்து 92 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் இருந்து 32 இலட்சத்து 28 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.