பிரான்ஸில் கடந்த ஒருவாரத்தின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தாக்கம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க செயற்பாடுகளை பிரான்ஸ் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக பகுதியளவில் தளர்த்தியிருந்தது.
இந்த நிலையில் பிரான்ஸில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 325 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 ஆயிரத்து 940 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.