மெய்ப்பொருள் காண்பது அறிவு

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தல்!

- Advertisement -

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி மதத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

- Advertisement -

இதன் அடிப்படையில் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, அனைத்துப் பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களும் தமது பிரதேச பொதுச் சுகாதாரப் பிரிவு அதிகாரியினது அறிவுறுத்தல்களுடன் கூடிய தொற்று நீக்கல் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிவாசல்களின் உள்நுழைவிற்காக ஒரு நுழைவாயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், குறித்த நுழைவாயில்களில் கைகளைச் சுத்தப்படுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழுகையை மேற்கொள்பவர்களுக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படுவதுடன், ஒவ்வொரு தொழுகைக்காகவும் 15 நிமிடத்திற்கு முன்னதாகவே பள்ளிவாசல்கள் திறக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 45 நிமிடங்களே தொழுகைக்காக ஒதுக்கப்படவேண்டுமெனவும், விசேட தொழுகைகள் மற்றும் கூட்டுத் தொழுகைகள் முன்னெடுக்கப்பட அனுமத்திக்கப்படமாட்டாது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 30 பேர்வரையிலேயே தொழுகைக்காக அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அனைவருமே முகக் கவசங்களை அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியினை அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தொழுகையாளர்களும் தொழுகைக்காகப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்புக்களை தம்முடன் எடுத்துவருவதுடன், தொழுகை முடிந்ததும் அவற்றைத் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களைப் பயன்படுத்தும் அனைவரும் சுகாதார அமைச்சினது நடைமுறைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொதுச் சுகாதாரப்பிரிவினரிற்கு இவ்விடயம் தொடர்பாக ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டுமென முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz