பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர், மினுவாங்கொடையில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
களனி குற்றத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பேலியகொடை குற்றத் தடுப்பு அதிகாரிகள் குறித்த இடத்திற்கு விரைந்த போது, சந்தேகநபரினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
இதன்படி, திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் ரத்மலானை மற்றும் மொரட்டுவைப் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.