மடுல்சீம – குரட்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள நீர்நிலை ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மடுல்சீம – குரட்டி எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 12 மற்றும் 13 வயதுகளை உடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக பஸறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மடுல்சீம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.