கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமுல்படுத்தப்பட்ட முடக்க செயற்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக நியூயோர்க் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உணவகங்கள் பல்பொருள் அங்காடிகள் என்பன மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நியூயோர்க் நகரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட சுமார் 4 லட்சம் பேர் தமது பணிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இதுவரை 2 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 ஆயிரத்து 844 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.