நியுசிலாந்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நியுசிலாந்து பிரதமர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முடக்க செயற்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இன்று அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நியுசிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.