வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர், W.D. லக்ஷ்மனை மேற்கோள் காட்டி சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களின் வைப்பகளைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு சில நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மூலம், ஏனைய வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தோல்வியடைந்துள்ளதாக அர்த்தப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.