மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளையும் ஊரடங்கு சட்டம் தொடரும்!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொசன் விடுமுறை தினங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இவ்வாறு நாட்டில் அமுல்பட்டுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.

அத்துடன், சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில்  தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றை பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில்  கடமையில் ஈடுபட்டுள்ள அனைத்து பொலிஸாருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு  மாத்திரமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம்  எனவும்,  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz