நாட்டில் பயிரிட முடியுமான பயிர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை தெலவில்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேசிய விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்