மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா : இன்றைய நிலவரம்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 கடற்படையினர் இன்று தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 418ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

கடற்படை ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களில் 771 பேர் கடற்படையினர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களில் 418 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், மேலும் 353 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவர்களில் ஒருவர், ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், பிட்டிபன தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும், மற்றுமொருவர், டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், கிராகம தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குவைத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கட்டாரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அம்பாறை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 27 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரும், கல்பிட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும், முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேரும் என 7 கடற்படையினர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மேலும், கல்பிட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, கடற்படையினர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 12 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், 84 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 849 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 144 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 93 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 41 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 107 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 97 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 44 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 107 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 68 ஆயிரத்து 204 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம், ஆயிரத்து 783 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் 40 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நேற்றைய தினம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 9 பேருக்கான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும், வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 7 பேருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்தில் பிற்பகல்...

Developed by: SEOGlitz