நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 11 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 84 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 813 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 144 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 93 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 41 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 109 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலை 97 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 44 பேரும், ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் 107 பேரும், தெல்தெனொய ஆதார வைத்தியசாலையில் 29 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 66 ஆயிரத்து 421 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.