மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா : இன்றைய நிலவரம்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 45 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த கடற்படையினருக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கடற்படை ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 608ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இவர்களில் 35 பேர் இராணுவ வைத்தியசாலையிலும், 10 பேர் ஹோமாகமை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என கடற்படை ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குணமடைந்து வீடு திரும்பிய கடற்படையினர் அனைவரும், மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்னர்.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 791 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், 74 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 80 ஆயிரத்து தொள்ளாயிரத்து 302 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஆயிரத்து 579 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 551 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 903 பேரும், வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 557 பேரும், ஏனைய 91 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமூகத்தில் இருந்து எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz