தேவாலயங்களில் மீண்டும் ஆராதனைகளை நடாத்துவதற்கு அனிமதிக்கப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான விசேட அறிக்கையிலேயே அரசாங்கத்திடம் குறித்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்ற முறையில் சில நிபந்தனைகளின் கீழ் ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என அவர் குறித்த கோரிக்கையினை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து தேவாலய வழிபாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும், வரையறுக்கப்பட்ட அங்கத்தவர்களின் பங்கேற்புடன் ஆராதனைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.