எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது நாளில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், இரண்டாவது நாளில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறும் எனவும், மூன்றாவது நாளில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவுற்றதன் பின்னர், ஆட்சியமைப்பதற்கான பலத்தைப் பெற்றுள்ள கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் கட்சி மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த நாள் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும், எனினும் ஏதேனும் ஒரு பகுதியில் தொற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டால் குறித்த பகுதிக்கு வேறு ஒரு நாளில் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.