மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரீட்சார்த்த தேர்தல்களை நடாத்துவதற்கு தேர்தல்கள்ஆணைக்குழு தீர்மானம்!

- Advertisement -

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 16 பரீட்சார்த்த தேர்தல்களை நடாத்துவதற்கு  எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் குறித்த பரீட்சார்த்த தேர்தல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

- Advertisement -

கொரோனா தொற்று பரவல் காரணமாக  அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடாத்தும் விதம் தொடர்பாக ஆராயும் நோக்கில் குறித்த பரீட்சார்த்த தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

முன்னதாக, கடந்த 7ஆம் திகதி  அம்பலாங்கொடை பிரதேசத்தில் 200 பேரின் பங்குபற்றலுடன் முதலாவது பரீட்சார்த்த தேர்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கைகளைக் கழுவும் நடைமுறைக்கு பதிலாக, தொற்று நீக்கி திரவத்தை பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு  800 கோடி ரூபா முதல் 900 கோடி ரூபா வரை செலவிடப்படும் எனவும் தேர்தல்கள் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் 225 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.

இவர்களில், 25 கட்சிகளின் சார்பாக, 3 ஆயிரத்து 652 பேரும், 313 சுயாதீன குழுக்களின் சார்பாக 3 ஆயிரத்து 800 பேரும் போட்டியிடவுள்ளனர்.

அத்துடன், 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை பொதுத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன், பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை 7 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும், எஞ்சியுள்ள மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை எதிர்வரும் வாரத்தில் நிறைவு செய்வதற்கு  எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz