மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் கொலை சம்பவ விசாரணையிலிருந்து எவருக்கும் தப்ப முடியாது : நாமல்!

- Advertisement -

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் கொலை சம்பவ விசாரணையிலிருந்து எவருக்கும் தப்ப முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாகன லீசிங் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்திய தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கடந்த செவ்வாய்கிழமை மிரிஹானையில் அமைந்துள்ள வாகனங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிதிநிறுவனம் ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, நாமல் ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, லீசிங் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz