மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்  சீனாவில் வெள்ளப்பெருக்கு : ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

- Advertisement -

தென்  சீனாவில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி முதல் தென் மற்றும் மத்திய  சீனாவில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 2 இலட்சம் 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

- Advertisement -

அத்துடன், ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக சீன அரசின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெற்கு Guangxi Zhuang பிரதேசத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பிரபல சுற்றுலாத் தலமான Yangshuo வீதி நீரில் மற்றும்  ஆயிரத்துற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz