மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிப்பு : வடகொரியா அறிவிப்பு!

- Advertisement -

தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக வட கொரியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இரு தரப்பு உறவில் பதற்றம் ஏற்படத்தொடங்கி உள்ளது. இரு தரப்பினரிடையேயும் கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டிருந்தன.

- Advertisement -

இந்நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளும் துண்டிக்கப்படுவதாக வடகொரியா அறிவித்துள்ளதுடன், இரு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ‘ஹாட்லைன்’ தொலைபேசி வசதியும் துண்டிக்கப்படுவதாக வடகொரியா அறிவித்திருக்கின்றது.

இதனையடுத்து தென்கொரிய அதிகாரிகளுடன் இரு நாடுகள் தொடர்பான எந்த பிரச்சினை குறித்தும் விவாதிப்பதற்குத் தயாராக இல்லை என்ற  முடிவுக்கு வந்திருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தென் கொரிய நாட்டை எதிரியாக அறிவிப்பதற்காக வடகொரியா எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உருவாகியுள்ள மோதல்நிலைமை சர்வதேச நாடுகளுக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

பேசுவதற்கு பேச்சுமில்லை சொல்வதற்கு வார்த்தையுமில்லை: இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா "கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டீரா?" எனக்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.facebook.com/Ilaiyaraaja/posts/3551745441536644

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Developed by: SEOGlitz