மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமம் ஏன் ரத்து செய்யப்பட்டது?

- Advertisement -

 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது 2008இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து கம்பெனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது.

வேறுபட்ட உபாயதிட்டங்களுடாக கம்பெனியினை மீளமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. மேலும் கம்பெனியின் தற்போதைய நிலையின் தொடர்ச்சி அதன் வைப்பாளர்களையும் ஏனைய ஆர்வலர்களையும் பாதிக்கும். மேலும்  கடந்த 15 மாதங்களாக வைப்பாளர்கள் வைப்புச் செய்த பணத்தை மீளப்பெற முடியாதநிலை காணப்பட்டது.

- Advertisement -

வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ஒத்தோபர் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிட்டவாறு நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை 2019 ஒத்தோபர் 23ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கம்பனிக்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்தது.

நிதித்தொழில் சட்டத்தில் குறிப்பிட்டவாறு உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 30 நாட்களுக்குள் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி எவ்வித ஆட்சேபனையும் வெளிப்பத்தவில்லை. அதன் அடிப்படையில் உரிமத்தினை இரத்துச் செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 60 நாட்கள் முடிவடையும் நிலையில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினது உரிமம் இரத்துச் செய்யப்படலாம். அதாவது 2019 திசேம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இரத்துச் செய்யப்படலாம். இருப்பினும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாணயச்சபை புதிய நம்பகமான முதலீட்டாளர் ஒருவரை மூலதன உள்ளீட்டிற்கான ஆதாரத்துடன் சேர்த்து வியாபார மீளமைத்தல் திட்டத்தினையும் சமர்ப்பிப்பதற்கு மீண்டுமொரு வாய்ப்பளித்தது. இருப்பினும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி இதுவரையில் எவ்விததிட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலினை கொண்டு நடாத்துவதற்கு த பினான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கியிருந்த உரிமத்தினை நிதித் தொழில் சட்டத்தின் கீழ் 2020 மே 22ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு தீர்மானித்தது. இதன்படி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது நிதித்தொழில் செய்வதற்கான அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத்திணைக்களத்தின் பணிப்பாளர், நிதி குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் நிதி குத்தகைக்குவிடல் நிறுவனமொன்றாக பதிவுசெய்யப்பட்ட த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் பதிவுச்சான்றிதழ் 2020 மே 22ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி த பினான்ஸ் கம்பனி பிஎல்சியானது புதிதாக குத்தகைகள் வழங்கும் அனுமதி அதே திகதியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது.

இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டமானது த பினான்ஸ் கம்பனி பிஎல்சியில் காப்புறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் இலங்கை வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஒழுங்குவிதிகளின்படி உயர்ந்தபட்சம் ரூ.600,000 வரையான தொகையினை இழப்பீடாகச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன்படி மொத்தவைப்பாளர்களில் 93% வைப்பாளர்கள் வைப்பிலிட்ட முழுத்தொகையை (145,172 மொத்தவைப்பாளர்களுள் 135,100 வைப்பாளர்கள்) பெறக்கூடியதாக இருக்கும். எஞ்சிய 7% ஆன வைப்பாளர்கள் (10,072 வைப்பாளர்கள்) ரூ.600,000 வரை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், வைப்பாளர்கள் எஞ்சியுள்ள தமது வைப்புக்களின் ஒரு பகுதியை நிதிக்கம்பனி முடிவுறுத்தப்படும் போது கோரல்களின் முன்னுரிமை தொடர்பான ஒழுங்குவிதிகளுக்குட்பட்டு ஒடுக்கிவிடும் செயன்முறையினூடாகவும் அறவிட்டுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் Mohammed bin Salman க்கு எதிராக அமெரிக்காவின் வொஷிங்டன் நீதிமன்றத்தில் சிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்கியைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டி...

கொரோனா தொற்றின் அச்சம்: பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டது

பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியானது தற்காலிகமான மூடப்பட்டுள்ளது. பேலியகொட மொத்த விற்பனை மீன்சந்தை தொகுதியில் தொழில்புரியும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே,  இந்த நடவடிக்கை முன்னெடுக்க்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கபட்ட...

நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்படி, குறைந்த பட்சம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...

Developed by: SEOGlitz