மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்போதைய பொருளாதார நிலைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : ரணில்!

- Advertisement -

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட  வேட்பாளர்களுடன் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட  தாம் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட்  -19 தொற்றுக்கு மத்தியில் வேறு நாடுகளில் பொருட்களின் விலைகள் குறைவடைந்ததாகவும், எனினும் இலங்கையில் மாத்திரமே கேள்வி அதிகமுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையின் பொருளதாரம்,  பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாகவும், நாட்டின் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டின் பொளாதார நிலைமை குறித்து வினவுவதற்கு உரிமை உள்ளதாகவும், இதனால் ஒளிவு மறைவின்றி அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சர்வதேச மகளிர் தினம் 2021 -ஒரு விசேட தொகுப்பு…!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கெப்பிட்டல் செய்திப் பிரிவு கொண்டுவரும் தொகுப்பு இது...! CAPITAL NEWS · WOMENS DAY

ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் -பிரதமர்

'அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்' எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்ட போதிலும்,...

‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

நாட்டில் அவசர தேவை நிமித்தம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை...

நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை...

ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் – ரொஷான் ரணசிங்க உறுதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கூட்டு முடிவொன்று மேற்கொள்ளப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள்...

Developed by: SEOGlitz