இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான கிரிக்கட் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்து வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில் 3 மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர்கள் குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னனி வீரர்களான Dwayne Bravo, Shimron Hetmyer, மற்றும் keemo Paul இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவு கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த கிரிக்கட் வீரர்களில் இந்த தீர்மானத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் விரர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் மேற்கிந்திய தீவு கிரிக்கட் சபை தெர்வித்துள்ளது.